Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, June 1, 2009

நான் உனது...........

நான் உனது 
க்ணிணியாகப் பிறந்திருக்கலாம்
உனது மடியிலோ 
எதிரிலோ எந்நேரமும் 
இருந்திருப்பேன்...................

நான் உனது
தொ.கா. பெட்டியாகப் பிறந்திருக்கலாம்
எட்டுமணி நேரமாவது
என்னை உன்கண்கள்
பார்த்திருக்கும்.........................


நான் உனது
சகபதிவராகவாவது பிறந்திருக்கலாம்
என்னெழுத்துக்களை யோசித்துக்கொண்டோ
அடிக்கடி பேசிக்கொண்டோ
இருந்திருப்பாய்.......................

நான் உனது
உடல்நலம் மன்நலம்பேணும்
வீடு குழந்தைக்ள் 
ந்லனும் வள்னும் காக்கும்
மெஷினாக அல்லவோ
பிற்ந்திருக்கிறேன்.....................

அதனால்தான்
எப்பொழுதாவது பார்த்து
என்றோ ஒருநாள் சிரித்து
எப்பொழுதும் என்னோடிருக்கிறாய்
இருப்பினும்
உன்னைச் சுற்றிசுற்றியே
என் உலகம் சுழலுகிறதே
ஏன்??................................................
 

Saturday, March 7, 2009

பெண்ணென்றால்.....


பெண்ணென்றால் கண் என்பர்,

பெண்ணேன்றால் பொன் என்பர்,

பெண்ணென்றால் பூவென்பர்

பெண்களே தெய்வம் என்பார்

பார்!.....என்றும் ஏட்டிலும் பாட்டிலுமே!


நிஜத்தில்....

தெருவில் நின்றிருப்பார்

சொற்களால் இழிவு செய்வார்

கருவினில் கண்டபோதும்

கலைத்திடு அதனை என்பார்!

பின்வருவதறியும் பெண்ணை

பின்புத்திக்காரி என்பார்

நன்மை ஆக்கி தீமை அழிக்கும் பெண்ணை

அழிவதும் பெண்ணாலே என்பார்!!



தெய்வமும் ஆக்க வேண்டாம்

தெருநாயாய் நடத்த வேண்டாம்

வேண்டுவதெல்லாம் இதுவே.....

நிஜமான பெண் விடுதலை வேண்டும்!

வேண்டும் என்றால்

வழங்க வேண்டாம்!!

வழங்க உரிமையற்ற

பெண்ணடிமைப் பிதாக்களே!


வழி விடுங்கள் போதும்

பெண் விடுதலை 

விரைவில் வரும்!!!!




 

Thursday, February 19, 2009

நாம் காதலர்களாகவே!!





நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்..
கண்ணோடு கண் நோக்கி,
கண் ஜாடையாலே பேசி,
கையோடு கைகோர்த்து,
கடற்கரையோரமாய் அமர்ந்து,
சின்ன சின்ன சரசம் செய்து,
இரவெல்லாம் நினைத்து ஏங்கி,
இரவு முடிந்து தூங்கி,
எப்போதும் உன் நினைவாய்.....

நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!.........

கல்யாணம் செய்து கொண்டு,
கணவனும் மனைவியுமாகி,
காலையில் அவசரமாய் எழுந்து,
காபி கலந்து, டிபன் செய்து
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
உன்னையும் கிளப்பி அனுப்பி
நானும் ஆபீஸ் சென்று
இருட்டியதும் வந்து
இரவு வேலைகள் முடித்து
இடைஇடையே பிரச்சினைகள் பேசி
எப்போதும் வேலைகள்
எப்போதும் சுற்றியுள்ள உறவுகள்
எல்லாவற்றையும் சமாளித்து
எங்கே அந்த காதல் நினைவுகள்?
யோசிக்கும் முன் தூங்கி...........

ஆம்!
நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!!

Monday, December 8, 2008

காதல்!














பார்த்திபன் கனவு,
சில்லென்று ஒரு காதல்,
வாரணம் ஆயிரம்
அப்புறம்.......
இன்னும் கதைகளுண்டா?
இரண்டாவதாய் வந்தவளை
இதயத்தில் நிறுத்திய ஹீரோக்கள்கதை
ஆமாம்..........
நேற்றுதான் சொன்னார் அவர்
முடிந்துபோன அவரது
முதல் காதலை!!!!!.

Saturday, December 6, 2008

முற்பகல் செய்யின்























நேற்று....
காலை ஆறுமணி 
எழுந்திரு என்றாள் அம்மா!
எட்டவில்லை என் காதுக்குள்
எழுந்து பாயைச் சுருட்டடீ என்றாள்
எங்கே டீ என்றேன் நான்
குளி போ சீக்கிரம் என்றாள்
குத்துகல்லாய் நின்றேன் நான்
சீக்கிரம் கிளம்பு ஸ்கூலுக்கு என்றாள்
சிரித்து கெக்கலித்தேன் நான்!
மாலை மெதுவடையுடன் அம்மா!
பஜ்ஜி எங்கே? என்று பதறடித்தேன் அவளை
படி படி என்றாள் அம்மா
படித்தேன் நான் கதைப்புத்த‌கங்களை!
வீட்டுவேலை கற்றுக்கொள் என்றாள்
விடம்மா என்றேன் நான்
கடமைகளை முடித்து 
களைப்பாய் வந்தாள் அம்மா!
கதை சொல் என்று படுத்தியெடுத்தேன் நான்
முற்பகல் செய்யின் 
பிற்பகல் விளையும் என்றாள்!
ஏட்டுச்சுரைக்காய் என்றேன்!!!

இன்று....
ஏழு மணி ஆயிற்று எழுந்திரு என்றேன்
நேரம் பார்க்கத் தெரியுமா உனக்கு என்றாள்
எழுந்து பாயைச் சுருட்டு என்றேன்
பட்டென்று காலை உதைத்து
எங்கே காபி என்றாள்!

முற்பகல் செய்யின்.....
பிற்பகல் விளையும்!...
என்றேன் நான்!