Sunday, December 7, 2008

குழவி










மலர்களின் சிரிப்பினைக் கண்டு
மகிழாதார் உண்டோ? உன்
புன்னகை மலர்களைக் கண்டும் 
மகிழாதார்தான் உண்டோ?
நிலவின் தண்மைதனில் 
நெகிழாதார் உண்டோ?உன்
தண்மைனிறை முகத்தழ்கில்
நெகிழாதார் உண்டோ?
மெல்லிசையின் நயம் கேட்டு
மயங்காதார் உண்டோ?உன்
மென்சொல் மொழிகேட்டும்
மயங்காதார்தான் உண்டோ!!

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இரண்டு புகைப் படங்களும் அருமை.அவைகளே ஒரு கவிதையாய். கவி சேர்கின்றன.

ஹரிணி அம்மா said...

நன்றி சுரேஷ்!!!