Tuesday, April 6, 2010

ஆம்! காதல்!!

முதல் காதல். . . . .
இரண்டாம் காதல். . . .
அய்ந்தாறு காதலாம்,
ஆண்களுக்கு -
கல்யாணத்துக்குப் பிறகுமாம்!!

பெண்களுக்கு
அடிமன ஆழத்தில்
அணிவரிசையில் காதலர்களாம்!

கள்ளக்காதல்களாம்
கணக்கின்றி
கூட்டலிலாம் பெருக்கலிலாம்!

கண்டவுடன் காதலா?
கள்ளக்காதலா?
பட்டிமன்றமாம்,
பாப்பையா தலைமையிலாம்!

கடுப்படிக்கிறதே என்றால்
காலமாம்- இது
கலிகாலமாம்!!!

ஒரு பதிவரின் பிடித்த பத்து பெண்கள் பதிவைப் பார்த்து தோன்றியது. பாவம்! அந்த இளைஞரின் மேல் எந்தக்குற்றமுமில்லை.

டிஸ்கி: ஒன்று அல்லது இரண்டு பெண்களைக் காதலித்து ஏமாந்த அல்லது ஏமாற்றிய ஆண்கள், அதே மாதிரி ஒன்று அல்லது இரண்டு ஆண்களைக்காதலித்து ஏமாந்த/ ஏமாற்றிய பெண்களைத்தேடி திருமணம் செய்து கொள்ளவும் !

Saturday, December 5, 2009

அறியாமை!!

ஊர்ந்து  செடிகளின் மறைவில்
பிளந்த நாவை நீட்டிக்
காத்திருக்குக்கும் தன்
இரை தேடி!

அறியுமா தன்
எச்சில்
அனைத்தையும்
அறிந்த மானுடனையும்
மரணிக்க வைக்குமென்று!!

Thursday, September 17, 2009

செப்படிவித்தைக்காரன்!


உன்னைப் போல்
ஒருவனை
நான் பார்த்ததில்லை!

அன்பு
உன்னிடமில்லை!
அபரிதமான பாசமும்
இல்லை!

ஒப்புக்காய்
சொல்வதற்கெல்லாம்
’ஊம்’ போடுகிறாய்!!

மாறுபட்டுக் கூறினாலும்
மவுனமாய்
இருக்கிறாய்!

கோபப்பட்டுக்
கத்தினாலும்
அமைதியாய் இருக்கிறாய்!

அன்பைக்
காட்டவும் தெரியாமல்

ஆசைப் பேச்சும்
பேசாமல்
உன்போல் எத்தனை பேர்?

கல் போல்
அமர்ந்திருக்கும்
கணவனே!
சொல்! நீ என்ன
செப்படி வித்தைக் காரனா?

ஒன்றுமே செய்யாமல்
என்னையும்
என் நினைவுகளையும்
உன்னையே
சுற்றிவரச் செய்கிறாயே!
எப்படி?

Monday, August 24, 2009

And Now.....

பத்திரமாய் வைத்திருந்த

அந்த

பழைய தாவணி

பாதியிலேயே

காணாமல் போனது..

அவனது

பார்வைகளும்தான்!!

 

ஆச்சியின்"And, Now..."

ஆயில்யனின் "And, Now..."

நிஜம்ஸின் "And, Now..."

தமிழ் பிரியன் “And, Now..."

அதிரை ஜமாலின் “And Now..."

Monday, June 1, 2009

நான் உனது...........

நான் உனது 
க்ணிணியாகப் பிறந்திருக்கலாம்
உனது மடியிலோ 
எதிரிலோ எந்நேரமும் 
இருந்திருப்பேன்...................

நான் உனது
தொ.கா. பெட்டியாகப் பிறந்திருக்கலாம்
எட்டுமணி நேரமாவது
என்னை உன்கண்கள்
பார்த்திருக்கும்.........................


நான் உனது
சகபதிவராகவாவது பிறந்திருக்கலாம்
என்னெழுத்துக்களை யோசித்துக்கொண்டோ
அடிக்கடி பேசிக்கொண்டோ
இருந்திருப்பாய்.......................

நான் உனது
உடல்நலம் மன்நலம்பேணும்
வீடு குழந்தைக்ள் 
ந்லனும் வள்னும் காக்கும்
மெஷினாக அல்லவோ
பிற்ந்திருக்கிறேன்.....................

அதனால்தான்
எப்பொழுதாவது பார்த்து
என்றோ ஒருநாள் சிரித்து
எப்பொழுதும் என்னோடிருக்கிறாய்
இருப்பினும்
உன்னைச் சுற்றிசுற்றியே
என் உலகம் சுழலுகிறதே
ஏன்??................................................
 

Tuesday, March 31, 2009

நன்றி! தமிழ்த்தோழி!

ந்ன்றி தமிழ்தோழி 

பட்டாம்பூச்சி விருது இரண்டாம்சுற்று வேகமாக இருக்கிற்து. இந்த ச்மய்த்தில் நான் ஒன்றை க்ண்டிப்பாக சொல்லவேண்டும்  

நான் அதிகம் எழுதுவதில்லை.காரண்ம் ஆணீ கடப்பாரை எல்லாம் இரண்டாம்பட்சம்
முதல் காரண்ம் டைப்பிங் தெரியாததால் எழுத அதிக நேரம் பிடிக்கும்.சோம்பேறித்தன்ம்.பலபதிவுகளை படித்துவிட்டு க்மண்ட்டுகூட எழுதாத சோம்பேறித்தனம்.
 
இவ்வளவு வேகமான பதிவர்க்ள் மத்தியில் நானா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது  தாரணிபிரியாவின் பட்டாம்பூச்சிவிருதில் ம்கிழ்ந்து எடுத்து ஒட்டி பதிவும்போட்டேன்

அதிக்ம் எழுதாத எனக்கு அன்பின் தோழி தமிழ்தோழி இன்னொரு பட்டாம்பூச்சி விருது கொடுத்தவுடன் தலைகால் புரியவில்லை. தவிரவும் ப்திவுகள் அதிகம் இல்லாத எனது பிளாகில் இரண்டு பட்டாம்பூச்சியை ஒட்டிக்கொள்ள ம்னசாட்சி இடம் கொடுக்கவில்லை. அவருக்கு ந்ன்றி தெரிவித்துவிட்டு விட்டுவிட்டேன்

ஆனாலும் தோழி என்ன் நினைத்துக்கொள்வாரோ என மனதில் உறுத்திக்கொண்டே இருந்த்தால் இந்த பட்டாம்பூச்சிவிருதின் இரண்டாவ்து சுற்றில் அவரின் பட்டாம்பூச்சியை ஒட்டி பதிவும் போட்டுவிட்டேன்

Saturday, March 21, 2009

அன்புமணி,வேத்தியன் & ஆதவா பட்டாம்பூச்சி விருதுகள்!!


அன்புமணி,வேத்தியன் & ஆதவா
பட்டாம்பூச்சி விருதுகள்!!


பட்டாம்பூச்சி விருது வாங்கி ரொம்ப நாளாச்சு. ஏகப்பட்ட 

ஆணிகள்,கடப்பாறைகளால் என்னால் பதிவுகூட போட முடியவில்லை. 

பெண்கள் தினத்தை ஒட்டி ஒரு கவிதை போட்டதோட சரி.

சரி!

நமக்குக்கிடைத்த பட்டாம் பூச்சியை கூண்டில் அடைத்துவிட்டோம். அது இப்போ 

3ஆகி 3 பேரிடம் போக வேண்டும்..

யாருக்கு அனுப்பலாம்? குடுத்தா அதை உபயோகிப்பவர்களுக்குக் கொடுக்க 

வேண்டும். நம் நண்பர் ஒருவர் 3 பேருக்கு கொடுத்தார். அதில் இடண்டு பேர் 

பெரிய பதிவர்களாம்.   அதனால் அப்படி ஒன்னு கொடுத்ததையே அவங்க 

கண்டுக்கவில்லை ! அட உண்மை தானுங்க!  புருடா இல்லை!

நான் கொடுக்கவிரும்பும் மூவர்!

1.குடந்தை அன்புமணி  http://anbuvanam.blogspot.com

அருமையான மனிதர்,பண்பானவர். அவர் பதிவுகளைப்பாருங்கள்.

2.வேத்தியன்   http://jsprasu.blogspot.com

சமீபகாலமாக புயல் வேகப்பதிவுகள் போடுபவர். விஜய் மேல ரொம்ப ஈடுபாடு 

உள்ளவர்.


கவிதை எழுதவா! ஆதவா! என்று அழைக்கும் அளவு பின்னி எடுக்கிறார் 

கவிதைகளை!!

இந்த பட்டாம் பூச்சியை எடுத்து (நன்றின்னு என்பெயர் போட்டு!!!) உங்கள் 

தளத்தின் நெற்றியில் ஒட்டவும்..

மேலும் 3 பேருக்கு கொடுக்கவும்..