
உன்னைப் போல்
ஒருவனை
நான் பார்த்ததில்லை!
அன்பு
உன்னிடமில்லை!
அபரிதமான பாசமும்
இல்லை!
ஒப்புக்காய்
சொல்வதற்கெல்லாம்
’ஊம்’ போடுகிறாய்!!
மாறுபட்டுக் கூறினாலும்
மவுனமாய்
இருக்கிறாய்!
கோபப்பட்டுக்
கத்தினாலும்
அமைதியாய் இருக்கிறாய்!
அன்பைக்
காட்டவும் தெரியாமல்
ஆசைப் பேச்சும்
பேசாமல்
உன்போல் எத்தனை பேர்?
கல் போல்
அமர்ந்திருக்கும்
கணவனே!
சொல்! நீ என்ன
செப்படி வித்தைக் காரனா?
ஒன்றுமே செய்யாமல்
என்னையும்
என் நினைவுகளையும்
உன்னையே
சுற்றிவரச் செய்கிறாயே!
எப்படி?
5 comments:
அன்பைக்
காட்டவும் தெரியாமல்
ஆசைப் பேச்சும்
பேசாமல்
உன்போல் எத்தனை பேர்?//
கலக்கல் வரிகள்பா. பல பேரின் மனதை படிச்சு பதிவு போட்டிருப்பதா எல்லோரும் பாராட்டப்போராங்க.
நான் முந்திக்கிட்டு பாராட்டிக்கறேன்.
நல்லா இருக்கு. என் மனைவி இதை கொஞ்சம் கோபமாக என்னிடம் சொல்லுவார்கள். வாழ்த்துக்கள்.
"ஒன்றுமே செய்யாமல்
என்னையும்
என் நினைவுகளையும்
உன்னையே
சுற்றிவரச் செய்கிறாயே!
எப்படி?" - ஒரு வேளை, ஒன்றுமே செய்யமால் இருப்பதால்தானோ என்னவோ?
ரொம்ப நல்லா இருக்கு ஹரிணி அம்மா!
கடைசியில் வைத்த ட்விஸ்ட்,மிக அருமை.
அருமை ஹரிணி... வாழ்த்துக்கள்...
Post a Comment