Monday, June 1, 2009

நான் உனது...........

நான் உனது 
க்ணிணியாகப் பிறந்திருக்கலாம்
உனது மடியிலோ 
எதிரிலோ எந்நேரமும் 
இருந்திருப்பேன்...................

நான் உனது
தொ.கா. பெட்டியாகப் பிறந்திருக்கலாம்
எட்டுமணி நேரமாவது
என்னை உன்கண்கள்
பார்த்திருக்கும்.........................


நான் உனது
சகபதிவராகவாவது பிறந்திருக்கலாம்
என்னெழுத்துக்களை யோசித்துக்கொண்டோ
அடிக்கடி பேசிக்கொண்டோ
இருந்திருப்பாய்.......................

நான் உனது
உடல்நலம் மன்நலம்பேணும்
வீடு குழந்தைக்ள் 
ந்லனும் வள்னும் காக்கும்
மெஷினாக அல்லவோ
பிற்ந்திருக்கிறேன்.....................

அதனால்தான்
எப்பொழுதாவது பார்த்து
என்றோ ஒருநாள் சிரித்து
எப்பொழுதும் என்னோடிருக்கிறாய்
இருப்பினும்
உன்னைச் சுற்றிசுற்றியே
என் உலகம் சுழலுகிறதே
ஏன்??................................................
 

6 comments:

*இயற்கை ராஜி* said...

nice:-)

குடந்தை அன்புமணி said...

யப்பாடி...! எவ்வளவு நாளாச்சு! ரொம்ப நல்லாருக்கு ஹரிணி அம்மா! அடிக்கடி எழுதுங்க!

Muruganandan M.K. said...

பெண்களின் உணர்வுகளை அழகாக வார்த்திருக்கிறீர்கள். நிஜமான உணர்வுகள். செறிவான கவிதை

இளையராஜா said...

nice

ஆண்டாள் said...

மிகவும் அருமை யதெச்சையாக உங்களது லின்க் பார்த்து வந்தென் என்னை ஏமாற்றவில்லை நன்றி

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

புறக்கணிப்பின் வலி உணர வைக்கும் கவிதை. கணிப்பொறி துறையை சார்ந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டிருக்கும், கணிப்பொறி சாராத துறை சார்ந்த பெண்கள் அனைவரின் எண்ணமாகவும் இது இருக்கலாம்.