Tuesday, April 6, 2010

ஆம்! காதல்!!

முதல் காதல். . . . .
இரண்டாம் காதல். . . .
அய்ந்தாறு காதலாம்,
ஆண்களுக்கு -
கல்யாணத்துக்குப் பிறகுமாம்!!

பெண்களுக்கு
அடிமன ஆழத்தில்
அணிவரிசையில் காதலர்களாம்!

கள்ளக்காதல்களாம்
கணக்கின்றி
கூட்டலிலாம் பெருக்கலிலாம்!

கண்டவுடன் காதலா?
கள்ளக்காதலா?
பட்டிமன்றமாம்,
பாப்பையா தலைமையிலாம்!

கடுப்படிக்கிறதே என்றால்
காலமாம்- இது
கலிகாலமாம்!!!

ஒரு பதிவரின் பிடித்த பத்து பெண்கள் பதிவைப் பார்த்து தோன்றியது. பாவம்! அந்த இளைஞரின் மேல் எந்தக்குற்றமுமில்லை.

டிஸ்கி: ஒன்று அல்லது இரண்டு பெண்களைக் காதலித்து ஏமாந்த அல்லது ஏமாற்றிய ஆண்கள், அதே மாதிரி ஒன்று அல்லது இரண்டு ஆண்களைக்காதலித்து ஏமாந்த/ ஏமாற்றிய பெண்களைத்தேடி திருமணம் செய்து கொள்ளவும் !

7 comments:

Chitra said...

டிஸ்கியில் வைத்துள்ள சூடு - சூப்பர் பஞ்ச்.

சென்ஷி said...

//டிஸ்கி: ஒன்று அல்லது இரண்டு பெண்களைக் காதலித்து ஏமாந்த அல்லது ஏமாற்றிய ஆண்கள், அதே மாதிரி ஒன்று அல்லது இரண்டு ஆண்களைக்காதலித்து ஏமாந்த/ ஏமாற்றிய பெண்களைத்தேடி திருமணம் செய்து கொள்ளவும் ! //

ஞானக்கண் திறந்து விட்டீர்கள். உடனே அப்படிப்பட்ட பெண்ணையும் தேடிக் காதலிக்க ஆரம்பிக்கலாம். நன்றி! :)

Dhosai--> said...

ha ha ha

அஹமது இர்ஷாத் said...

//கண்டவுடன் காதலா?
கள்ளக்காதலா?
பட்டிமன்றமாம்,
பாப்பையா தலைமையிலாம்!//

பாப்பையாவ கொஞ்சம் ஃப்ரீயா இருக்க வுடுகங்கப்பா.......

க.பாலாசி said...

ம்ம்ம்ம்............

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in