நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்..
கண்ணோடு கண் நோக்கி,
கண் ஜாடையாலே பேசி,
கையோடு கைகோர்த்து,
கடற்கரையோரமாய் அமர்ந்து,
சின்ன சின்ன சரசம் செய்து,
இரவெல்லாம் நினைத்து ஏங்கி,
இரவு முடிந்து தூங்கி,
எப்போதும் உன் நினைவாய்.....
நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!.........
கல்யாணம் செய்து கொண்டு,
கணவனும் மனைவியுமாகி,
காலையில் அவசரமாய் எழுந்து,
காபி கலந்து, டிபன் செய்து
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
உன்னையும் கிளப்பி அனுப்பி
நானும் ஆபீஸ் சென்று
இருட்டியதும் வந்து
இரவு வேலைகள் முடித்து
இடைஇடையே பிரச்சினைகள் பேசி
எப்போதும் வேலைகள்
எப்போதும் சுற்றியுள்ள உறவுகள்
எல்லாவற்றையும் சமாளித்து
எங்கே அந்த காதல் நினைவுகள்?
யோசிக்கும் முன் தூங்கி...........
ஆம்!
நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!!
15 comments:
1st aaa ?
//நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்..
//
என்ன கேட்டா பிரண்ட்ஸ் ஆவே இருந்திருக்கலாம்னு ஆரம்பித்திருப்பேன்.
//கண்ணோடு கண் நோக்கி,
கண் ஜாடையாலே பேசி,
கையோடு கைகோர்த்து,
கடற்கரையோரமாய் அமர்ந்து,
சின்ன சின்ன சரசம் செய்து,
//
அசத்தல் ஆரம்பம்...
பசுமையான நினைவுகள்...
கலக்குறீங்க ஹரிணி அம்மா..
//கல்யாணம் செய்து கொண்டு,
கணவனும் மனைவியுமாகி,
காலையில் அவசரமாய் எழுந்து,
காபி கலந்து, டிபன் செய்து
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
உன்னையும் கிளப்பி அனுப்பி
நானும் ஆபீஸ் சென்று
இருட்டியதும் வந்து
இரவு வேலைகள் முடித்து
இடைஇடையே பிரச்சினைகள் பேசி
எப்போதும் வேலைகள்
எப்போதும் சுற்றியுள்ள உறவுகள்
எல்லாவற்றையும் சமாளித்து
எங்கே அந்த காதல் நினைவுகள்?
//
நினைவுகள் மட்டுமாவது சிலரிடம் மிச்சமிருக்கிறதே..
அழகான கவிதை ஹரிணி அம்மா..
வாழ்வின் நிதர்சனம்.
பரபரப்பான வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறோம், காதலைத் துறந்து என்பதை தங்கள் கவிதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. நகரவாழ்க்கை, பொருளாதார சூழ்நிலையில் இப்படி கவிதை எழுதி ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானா? நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்.. உண்மைதான்... ம்!
//அ.மு.செய்யது said...
அழகான கவிதை ஹரிணி அம்மா..
வாழ்வின் நிதர்சனம்.//
ரிப்பீட்டுடுடுடுடுடுடுடு..
வாவ்... என்ன ஒரு சிந்தனை! ரொம்ப யோசிக்க வச்சுட்டீங்களே! சூப்பர்...:)
nice lines
நல்லா இருக்கு ஹரினி அம்மா...
உங்க ரசனையை நான் ரொம்ப ரசித்தேன்.....
nice lines:-)
//கண்ணோடு கண் நோக்கி,
கண் ஜாடையாலே பேசி,
கையோடு கைகோர்த்து,
கடற்கரையோரமாய் அமர்ந்து,
சின்ன சின்ன சரசம் செய்து,
இரவெல்லாம் நினைத்து ஏங்கி,
இரவு முடிந்து தூங்கி,
எப்போதும் உன் நினைவாய்.....//
அழகான ரசனையான வரிகள்...
ஹரிணி அம்மா
இப்பொழுதுதான் உங்களின் பிளாக்கை ஊஞ்சல் வாயிலாக பார்த்தேன்
மனம் விட்டு சொல்கிறேன் ""நாம் காதலர்களாகவே!!"" இதற்கான அர்த்தம் முழுவதுமாய் புரிந்தவன் நான் .
திருமணம் முடிந்தபின்பும் என் தேவதை எனக்கே எப்பொழுதும் ,கவனிக்காமல் போனால் கூட , பயணங்கள் எப்பொழுதும் அவளுக்காகவே
மிக அழகான கவிதை மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தோழமையுடன்
ஜீவா
arumai!!
same blood :-((
Post a Comment