ஒரு நொடி தாமதமானாலும்
கண்கள் பூத்துப்போகின்றன!!
ஒரு நாள் பார்க்காவிட்டாலும்
கண்கள் கனத்துவிடுகின்றன!
ஒரு நாள் முழுக்க
எங்கேயிருக்கிறாய்
என்ன செய்கிறாய்
என்று கேட்டே
என் ஏர்செல் பில் எங்கோ
போய்விட்டது!!!
உன் மூச்சுக்காற்றின்
மணத்தை
சுவசிக்காத
என் நுரையீரல்களும்
சுருங்கி விடுகின்றன!!
உன் உதடுகளின்
ஸ்பரிசம்
கேட்டு
என் இதயமும்
துடிதுடிக்கிறது!!
உன்னை
ஒரு முறையாவது
உரசிவிடும் நோக்கில்
என் வேலைகள்
எல்லாம்
உன் அருகேயே நடக்கிறது!!
உன்னையும்
உன்னைச்சார்ந்தும்
எப்போதும் யோசித்து
என் சுயம்
முழுக்க
இழந்து விட்டேன் நான்!!
என் தந்தை,தாய்
தமக்கை,தனையன்
தோழிகள் உறவின்ர்
யாரைப்பற்றியும்
யோசிப்பதில்லை நான்!!!
என்னைச்சூழ்ந்து
எங்கும்
வியாபித்திருக்கிறாய்
நீ!!
ஆனால்
நீ...
என் காதலன் அல்ல!
கணவன் என்றால்
எல்லொரும்
வியக்கிறார்கள்!!!!!
ஏனிப்படி??.
37 comments:
கணவனை
காதலிக்கும்
உங்களை
வாழ்த்துகிறேன்...
இந்த காதல் நீடித்து இருக்க வாழ்த்துக்கிறோம் ஹரிணி அம்மா
ஒரு நாள் முழுக்க
எங்கேயிருக்கிறாய்
என்ன செய்கிறாய்
என்று கேட்டே
என் ஏர்செல் பில் எங்கோ
போய்விட்டது!!!
யதார்த்தம்....
awwwwwwwwsome! நல்ல வரிகள்..யதார்த்தம்!! :-)
திருமணம் நடந்து 5 வருடங்கள் கழித்த பின்னும் இந்த உணர்வுகள் நீடிக்கிறதா எனப் பாருங்கள்!அப்போது என் வாழ்த்துக்கள் !
நான் சொல்லும் அனைத்தையும் சொல்லிடிங்க.. கவிதை அருமையா இருக்கு ஹரிணி அம்மா..
கவிதை முழுவதும் காதல் ததும்பி வழிகிறது...
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...
// அறிவன்#11802717200764379909 said...
திருமணம் நடந்து 5 வருடங்கள் கழித்த பின்னும் இந்த உணர்வுகள் நீடிக்கிறதா எனப் பாருங்கள்!அப்போது என் வாழ்த்துக்கள் !
//
எங்கள் திருமணம் முடிந்து முழுதாய் 6 வருடங்கள் முடிந்து விட்டது ஆனாலும் நான் இன்று வரை இப்படிதான் உணருகிறேன்:)
// அறிவன்#11802717200764379909 said...
திருமணம் நடந்து 5 வருடங்கள் கழித்த பின்னும் இந்த உணர்வுகள் நீடிக்கிறதா எனப் பாருங்கள்!அப்போது என் வாழ்த்துக்கள் !
//
எங்கள் திருமணம் முடிந்து முழுதாய் 6 வருடங்கள் முடிந்து விட்டது ஆனாலும் நான் இன்று வரை இப்படிதான் உணருகிறேன்
அருமையான வரிகள்
காதலோடு.
இன்னும் இன்னும் எழுதுங்கள்
அருமையான வரிகள்
காதலோடு.
இன்னும் இன்னும் எழுதுங்கள்
இந்த காதல் நீடித்து இருக்க வாழ்த்துக்கிறோம் ஹரிணி அம்மா//
வாழ்த்துக்கு நன்றி..
நான் பிரார்த்திப்பதும் அதுவே..
ஒரு நாள் முழுக்க
எங்கேயிருக்கிறாய்
என்ன செய்கிறாய்
என்று கேட்டே
என் ஏர்செல் பில் எங்கோ
போய்விட்டது!!!
யதார்த்தம்...//
நன்றி கவின்!!
பலருக்கும்
இது நடப்பதுதான்
awwwwwwwwsome! நல்ல வரிகள்..யதார்த்தம்!! :-)//
நன்றி சந்தனமுல்லை!!!
நீங்கள்
பாராட்டியது
எனக்கு
மகிழ்வாக
உள்ளது..
.திருமணம் நடந்து 5 வருடங்கள் கழித்த பின்னும் இந்த உணர்வுகள் நீடிக்கிறதா எனப் பாருங்கள்!அப்போது என் வாழ்த்துக்கள் !
அறிவன் 13 வருடம் முடிந்து விட்டது.
நான் சொல்லும் அனைத்தையும் சொல்லிடிங்க.. கவிதை அருமையா இருக்கு ஹரிணி அம்மா..//
நன்றி பூர்ணிமா!!
என் போல தாங்களும்
சிந்திப்பதில் மகிழ்ச்சி..
கவிதை முழுவதும் காதல் ததும்பி வழிகிறது...
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...///
நன்றி புதியவன்..
முயற்சிக்கிறேன்...
// அறிவன்#11802717200764379909 said...
திருமணம் நடந்து 5 வருடங்கள் கழித்த பின்னும் இந்த உணர்வுகள் நீடிக்கிறதா எனப் பாருங்கள்!அப்போது என் வாழ்த்துக்கள் !
//
எங்கள் திருமணம் முடிந்து முழுதாய் 6 வருடங்கள் முடிந்து விட்டது ஆனாலும் நான் இன்று வரை இப்படிதான் உணருகிறேன்:)//
சரிதான் தொடரட்டும்..
அருமையான வரிகள்
காதலோடு.
இன்னும் இன்னும் எழுதுங்கள்///
நன்றி ஜமால்!!
முயற்சி செய்கிறேன்..
உங்கள் காதல் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
அழகான உள்ளத்து உணர்ச்சிகள்! இன்று மனதுக்கு ஒரு இதமான வாசிப்பு ..தொடருங்கள் ஹம்மா...
அருமை. தொடருங்கள்..
ஒரே ஃப்லீங்க்ஸா இருக்குப்பா.
14 வருஷம் முடிஞ்ச பின்னாலும் அயித்தான் ஊருக்கு போனா “தண்ணீரில் இல்லாத மீனாத்தான்” மனசு இருக்கு.
நல்லா இருங்க.
உங்கள் அன்பை வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. இருபதில் ஆரம்பிச்சோம், அறுபது ஆயிடிச்சே இன்னமும் முடியலையே என்று காதல் கவிதை - நீங்கள் பாடவேண்டும். உங்களுக்கு அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்.
ஆச்சு 13 வருஷம்! அதே பீலிங்க்ஸ் ஆப் இண்டியா:-))
காதல் என்பது உணர்வு...
நல்ல உணர்வுகள் மாறுவதில்லை...
கல்யாணம் முடிந்து 17 வருடங்கள் கழிந்த பின்னும், எங்களின் காதல் உணர்வு மங்கவேயில்லை.
///
ஆனால்
நீ...
என் காதலன் அல்ல!
கணவன் என்றால்
எல்லொரும்
வியக்கிறார்கள்!!!!!
ஏனிப்படி??.
///
காதலன் வேறு கனவன் வேறு என்று பார்ப்பவர்கள் தான் வியக்கிறார்கள்
உங்கள் காதல் நீடுழி வாழ வாழ்த்துக்கள்//
நன்றி தங்கள் வருகைக்கு..
அழகான உள்ளத்து உணர்ச்சிகள்! இன்று மனதுக்கு ஒரு இதமான வாசிப்பு ..தொடருங்கள் ஹம்மா...///
எழுதுகிறேன்..
அருமை. தொடருங்கள்..///
நன்றி...
ஒரே ஃப்லீங்க்ஸா இருக்குப்பா.
14 வருஷம் முடிஞ்ச பின்னாலும் அயித்தான் ஊருக்கு போனா “தண்ணீரில் இல்லாத மீனாத்தான்” மனசு இருக்கு.
நல்லா இருங்க.//
சங்கடப்படாதீங்க...
உங்கள் அன்பை வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. இருபதில் ஆரம்பிச்சோம், அறுபது ஆயிடிச்சே இன்னமும் முடியலையே என்று காதல் கவிதை - நீங்கள் பாடவேண்டும். உங்களுக்கு அட்வான்ஸ் காதலர் தின வாழ்த்துக்கள்.///
நன்றி தங்கள் வருகைக்கு..
ஆச்சு 13 வருஷம்! அதே பீலிங்க்ஸ் ஆப் இண்டியா:-))///
ஆமாம்!!
கருத்துக்கு
நன்றி..
காதல் என்பது உணர்வு...
நல்ல உணர்வுகள் மாறுவதில்லை...
கல்யாணம் முடிந்து 17 வருடங்கள் கழிந்த பின்னும், எங்களின் காதல் உணர்வு மங்கவேயில்லை.///
ஆமாம்..
கருத்துக்கு
நன்றி..
//
ஆனால்
நீ...
என் காதலன் அல்ல!
கணவன் என்றால்
எல்லொரும்
வியக்கிறார்கள்!!!!!
ஏனிப்படி??.
///
காதலன் வேறு கனவன் வேறு என்று பார்ப்பவர்கள் தான் வியக்கிறார்கள்///
மிக்க நன்றி பிரபு!!!
பிடித்தவற்றைப் பாராட்டுவது
அழகு
தேடிப் பிடித்த கவிதை
அன்புடன்
திகழ்
Same blood! Super kavithai.
Post a Comment