Saturday, March 7, 2009

பெண்ணென்றால்.....


பெண்ணென்றால் கண் என்பர்,

பெண்ணேன்றால் பொன் என்பர்,

பெண்ணென்றால் பூவென்பர்

பெண்களே தெய்வம் என்பார்

பார்!.....என்றும் ஏட்டிலும் பாட்டிலுமே!


நிஜத்தில்....

தெருவில் நின்றிருப்பார்

சொற்களால் இழிவு செய்வார்

கருவினில் கண்டபோதும்

கலைத்திடு அதனை என்பார்!

பின்வருவதறியும் பெண்ணை

பின்புத்திக்காரி என்பார்

நன்மை ஆக்கி தீமை அழிக்கும் பெண்ணை

அழிவதும் பெண்ணாலே என்பார்!!



தெய்வமும் ஆக்க வேண்டாம்

தெருநாயாய் நடத்த வேண்டாம்

வேண்டுவதெல்லாம் இதுவே.....

நிஜமான பெண் விடுதலை வேண்டும்!

வேண்டும் என்றால்

வழங்க வேண்டாம்!!

வழங்க உரிமையற்ற

பெண்ணடிமைப் பிதாக்களே!


வழி விடுங்கள் போதும்

பெண் விடுதலை 

விரைவில் வரும்!!!!




 

28 comments:

butterfly Surya said...

மகளிர் தின வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

// வழங்க உரிமையற்ற
பெண்ணடிமைப் பிதாக்களே!

வழி விடுங்கள் போதும்
பெண் விடுதலை
விரைவில் வரும்!!!!//

வழங்க உரிமையற்ற பெண்ணடிமை பித்தர்களே என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்

இராகவன் நைஜிரியா said...

// தெய்வமும் ஆக்க வேண்டாம்
தெருநாயாய் நடத்த வேண்டாம்
வேண்டுவதெல்லாம் இதுவே.....
நிஜமான பெண் விடுதலை வேண்டும்! //

நெத்தியடி..

ஹரிணி அம்மா said...

மகளிர் தின வாழ்த்துகள்//

நன்றி!!

இராகவன் நைஜிரியா said...

// பெண்ணென்றால் கண் என்பர்,
பெண்ணேன்றால் பொன் என்பர்,
பெண்ணென்றால் பூவென்பர்
பெண்களே தெய்வம் என்பார்
பார்!.....என்றும் ஏட்டிலும் பாட்டிலுமே! //

ஆம். ஏட்டிலும் பாட்டிலும் மட்டுமே..

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது..

ஹரிணி அம்மா said...

அன்புச் சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.///

மிக்க நன்றி !!!

உங்கள் வாழ்த்துக்களுக்கு

ஹரிணி அம்மா said...

அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்//

வாருங்கள்!!
ஜமால்!!!

ஹரிணி அம்மா said...

// வழங்க உரிமையற்ற
பெண்ணடிமைப் பிதாக்களே!

வழி விடுங்கள் போதும்
பெண் விடுதலை
விரைவில் வரும்!!!!//

வழங்க உரிமையற்ற பெண்ணடிமை பித்தர்களே என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்///

கொஞ்சம் உறுத்தாமல் எழுதுவதற்காக!!!

ஹரிணி அம்மா said...

// தெய்வமும் ஆக்க வேண்டாம்
தெருநாயாய் நடத்த வேண்டாம்
வேண்டுவதெல்லாம் இதுவே.....
நிஜமான பெண் விடுதலை வேண்டும்! //

நெத்தியடி..///

சுத்தியடி& நெத்தியடி!!

ஹரிணி அம்மா said...

// பெண்ணென்றால் கண் என்பர்,
பெண்ணேன்றால் பொன் என்பர்,
பெண்ணென்றால் பூவென்பர்
பெண்களே தெய்வம் என்பார்
பார்!.....என்றும் ஏட்டிலும் பாட்டிலுமே! //

ஆம். ஏட்டிலும் பாட்டிலும் மட்டுமே..

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது..//


நிலைமை அதுதானே!

தேவன் மாயம் said...

கவிதை
அருமைங்க!!

தேவன் மாயம் said...

வழி விடுங்கள் போதும்

பெண் விடுதலை

விரைவில் வரும்!!!!
///

நாங்க வழி விடுகிறோம் வாங்க!

anbudan vaalu said...

\\வேண்டும் என்றால்


வழங்க வேண்டாம்!!


வழங்க உரிமையற்ற


பெண்ணடிமைப் பிதாக்களே!




வழி விடுங்கள் போதும்


பெண் விடுதலை


விரைவில் வரும்!!!!\\

அருமை....
மகளிர் தின வாழ்த்துக்கள்

நசரேயன் said...

மகளிர் தின வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

உலக மகளிர் அனைவருக்கும் என் வலைத்தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! தங்கள் கவிதைப்படி (எண்ணப்படி) நடக்கவே நாமும் விரும்புகிறோம்!

ஹரிணி அம்மா said...

\வேண்டும் என்றால்


வழங்க வேண்டாம்!!


வழங்க உரிமையற்ற


பெண்ணடிமைப் பிதாக்களே!




வழி விடுங்கள் போதும்


பெண் விடுதலை


விரைவில் வரும்!!!!\\

அருமை....
மகளிர் தின வாழ்த்துக்கள்////

ஹரிணி அம்மா said...

\வேண்டும் என்றால்


வழங்க வேண்டாம்!!


வழங்க உரிமையற்ற


பெண்ணடிமைப் பிதாக்களே!




வழி விடுங்கள் போதும்


பெண் விடுதலை


விரைவில் வரும்!!!!\\

அருமை....
மகளிர் தின வாழ்த்துக்கள்////


நண்பருக்கு என் நன்றி

ஹரிணி அம்மா said...

மகளிர் தின வாழ்த்துகள்.///

நன்றி நசரேயன் வாழ்த்துக்கள்!!

ஹரிணி அம்மா said...

உலக மகளிர் அனைவருக்கும் என் வலைத்தளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! தங்கள் கவிதைப்படி (எண்ணப்படி) நடக்கவே நாமும் விரும்புகிறோம்!///

அப்படி நடந்தால் நல்லதுதானே!!

ராஜ நடராஜன் said...

ஹரிணி அம்மா!உங்களுக்கு சொல்வதற்கு வார்த்தைகளாவது உள்ளது.மனதையே முக்காடு போட்டுக்கொள்ளும் பெண்களுக்காக வேண்டுங்கள் விடுதலை.

கவிதா | Kavitha said...

//பின்புத்திக்காரி என்பார்

அழிவதும் பெண்ணாலே என்பார்!!
//

ம்ம் உண்மையான வரிகள்..

கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..!!

ராமலக்ஷ்மி said...

ஏட்டிலும் பாட்டிலும் ஏற்றி வைத்து
நிஜத்தில் மாற்றி நடத்தும் மனிதரைப் பற்றி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

மகளிர்தின வாழ்த்துக்கள்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...



ளி
ர்

தி


வா
ழ்
த்
து
க்

ள்

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க...வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

Poornima Saravana kumar said...

மகளிர் தின வாழ்த்துகள்.

nellai ram said...

what a fine puthukavthi!