Saturday, December 5, 2009
அறியாமை!!
ஊர்ந்து செடிகளின் மறைவில்
பிளந்த நாவை நீட்டிக்
காத்திருக்குக்கும் தன்
இரை தேடி!
அறியுமா தன்
எச்சில்
அனைத்தையும்
அறிந்த மானுடனையும்
மரணிக்க வைக்குமென்று!!
பிளந்த நாவை நீட்டிக்
காத்திருக்குக்கும் தன்
இரை தேடி!
அறியுமா தன்
எச்சில்
அனைத்தையும்
அறிந்த மானுடனையும்
மரணிக்க வைக்குமென்று!!
Thursday, September 17, 2009
செப்படிவித்தைக்காரன்!

உன்னைப் போல்
ஒருவனை
நான் பார்த்ததில்லை!
அன்பு
உன்னிடமில்லை!
அபரிதமான பாசமும்
இல்லை!
ஒப்புக்காய்
சொல்வதற்கெல்லாம்
’ஊம்’ போடுகிறாய்!!
மாறுபட்டுக் கூறினாலும்
மவுனமாய்
இருக்கிறாய்!
கோபப்பட்டுக்
கத்தினாலும்
அமைதியாய் இருக்கிறாய்!
அன்பைக்
காட்டவும் தெரியாமல்
ஆசைப் பேச்சும்
பேசாமல்
உன்போல் எத்தனை பேர்?
கல் போல்
அமர்ந்திருக்கும்
கணவனே!
சொல்! நீ என்ன
செப்படி வித்தைக் காரனா?
ஒன்றுமே செய்யாமல்
என்னையும்
என் நினைவுகளையும்
உன்னையே
சுற்றிவரச் செய்கிறாயே!
எப்படி?
Monday, August 24, 2009
And Now.....
பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!
Monday, June 1, 2009
நான் உனது...........
நான் உனது
க்ணிணியாகப் பிறந்திருக்கலாம்
உனது மடியிலோ
எதிரிலோ எந்நேரமும்
இருந்திருப்பேன்...................
நான் உனது
தொ.கா. பெட்டியாகப் பிறந்திருக்கலாம்
எட்டுமணி நேரமாவது
என்னை உன்கண்கள்
பார்த்திருக்கும்.........................
நான் உனது
சகபதிவராகவாவது பிறந்திருக்கலாம்
என்னெழுத்துக்களை யோசித்துக்கொண்டோ
அடிக்கடி பேசிக்கொண்டோ
இருந்திருப்பாய்.......................
நான் உனது
உடல்நலம் மன்நலம்பேணும்
வீடு குழந்தைக்ள்
ந்லனும் வள்னும் காக்கும்
மெஷினாக அல்லவோ
பிற்ந்திருக்கிறேன்.....................
அதனால்தான்
எப்பொழுதாவது பார்த்து
என்றோ ஒருநாள் சிரித்து
எப்பொழுதும் என்னோடிருக்கிறாய்
இருப்பினும்
உன்னைச் சுற்றிசுற்றியே
என் உலகம் சுழலுகிறதே
ஏன்??................................................
Tuesday, March 31, 2009
நன்றி! தமிழ்த்தோழி!
ந்ன்றி தமிழ்தோழி
பட்டாம்பூச்சி விருது இரண்டாம்சுற்று வேகமாக இருக்கிற்து. இந்த ச்மய்த்தில் நான் ஒன்றை க்ண்டிப்பாக சொல்லவேண்டும்
நான் அதிகம் எழுதுவதில்லை.காரண்ம் ஆணீ கடப்பாரை எல்லாம் இரண்டாம்பட்சம்
முதல் காரண்ம் டைப்பிங் தெரியாததால் எழுத அதிக நேரம் பிடிக்கும்.சோம்பேறித்தன்ம்.பலபதிவுகளை படித்துவிட்டு க்மண்ட்டுகூட எழுதாத சோம்பேறித்தனம்.
இவ்வளவு வேகமான பதிவர்க்ள் மத்தியில் நானா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது தாரணிபிரியாவின் பட்டாம்பூச்சிவிருதில் ம்கிழ்ந்து எடுத்து ஒட்டி பதிவும்போட்டேன்
அதிக்ம் எழுதாத எனக்கு அன்பின் தோழி தமிழ்தோழி இன்னொரு பட்டாம்பூச்சி விருது கொடுத்தவுடன் தலைகால் புரியவில்லை. தவிரவும் ப்திவுகள் அதிகம் இல்லாத எனது பிளாகில் இரண்டு பட்டாம்பூச்சியை ஒட்டிக்கொள்ள ம்னசாட்சி இடம் கொடுக்கவில்லை. அவருக்கு ந்ன்றி தெரிவித்துவிட்டு விட்டுவிட்டேன்
ஆனாலும் தோழி என்ன் நினைத்துக்கொள்வாரோ என மனதில் உறுத்திக்கொண்டே இருந்த்தால் இந்த பட்டாம்பூச்சிவிருதின் இரண்டாவ்து சுற்றில் அவரின் பட்டாம்பூச்சியை ஒட்டி பதிவும் போட்டுவிட்டேன்
Saturday, March 21, 2009
அன்புமணி,வேத்தியன் & ஆதவா பட்டாம்பூச்சி விருதுகள்!!
அன்புமணி,வேத்தியன் & ஆதவா
பட்டாம்பூச்சி விருதுகள்!!
பட்டாம்பூச்சி விருது வாங்கி ரொம்ப நாளாச்சு. ஏகப்பட்ட
ஆணிகள்,கடப்பாறைகளால் என்னால் பதிவுகூட போட முடியவில்லை.
பெண்கள் தினத்தை ஒட்டி ஒரு கவிதை போட்டதோட சரி.
சரி!
நமக்குக்கிடைத்த பட்டாம் பூச்சியை கூண்டில் அடைத்துவிட்டோம். அது இப்போ
3ஆகி 3 பேரிடம் போக வேண்டும்..
யாருக்கு அனுப்பலாம்? குடுத்தா அதை உபயோகிப்பவர்களுக்குக் கொடுக்க
வேண்டும். நம் நண்பர் ஒருவர் 3 பேருக்கு கொடுத்தார். அதில் இடண்டு பேர்
பெரிய பதிவர்களாம். அதனால் அப்படி ஒன்னு கொடுத்ததையே அவங்க
கண்டுக்கவில்லை ! அட உண்மை தானுங்க! புருடா இல்லை!
நான் கொடுக்கவிரும்பும் மூவர்!
1.குடந்தை அன்புமணி http://anbuvanam.blogspot.com
அருமையான மனிதர்,பண்பானவர். அவர் பதிவுகளைப்பாருங்கள்.
2.வேத்தியன் http://jsprasu.blogspot.com
சமீபகாலமாக புயல் வேகப்பதிவுகள் போடுபவர். விஜய் மேல ரொம்ப ஈடுபாடு
உள்ளவர்.
கவிதை எழுதவா! ஆதவா! என்று அழைக்கும் அளவு பின்னி எடுக்கிறார்
கவிதைகளை!!
இந்த பட்டாம் பூச்சியை எடுத்து (நன்றின்னு என்பெயர் போட்டு!!!) உங்கள்
தளத்தின் நெற்றியில் ஒட்டவும்..
மேலும் 3 பேருக்கு கொடுக்கவும்..
Saturday, March 7, 2009
பெண்ணென்றால்.....

பெண்ணென்றால் கண் என்பர்,
பெண்ணேன்றால் பொன் என்பர்,
பெண்ணென்றால் பூவென்பர்
பெண்களே தெய்வம் என்பார்
பார்!.....என்றும் ஏட்டிலும் பாட்டிலுமே!
நிஜத்தில்....
தெருவில் நின்றிருப்பார்
சொற்களால் இழிவு செய்வார்
கருவினில் கண்டபோதும்
கலைத்திடு அதனை என்பார்!
பின்வருவதறியும் பெண்ணை
பின்புத்திக்காரி என்பார்
நன்மை ஆக்கி தீமை அழிக்கும் பெண்ணை
அழிவதும் பெண்ணாலே என்பார்!!
தெய்வமும் ஆக்க வேண்டாம்
தெருநாயாய் நடத்த வேண்டாம்
வேண்டுவதெல்லாம் இதுவே.....
நிஜமான பெண் விடுதலை வேண்டும்!
வேண்டும் என்றால்
வழங்க வேண்டாம்!!
வழங்க உரிமையற்ற
பெண்ணடிமைப் பிதாக்களே!
வழி விடுங்கள் போதும்
பெண் விடுதலை
விரைவில் வரும்!!!!
Thursday, February 19, 2009
நாம் காதலர்களாகவே!!

நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்..
கண்ணோடு கண் நோக்கி,
கண் ஜாடையாலே பேசி,
கையோடு கைகோர்த்து,
கடற்கரையோரமாய் அமர்ந்து,
சின்ன சின்ன சரசம் செய்து,
இரவெல்லாம் நினைத்து ஏங்கி,
இரவு முடிந்து தூங்கி,
எப்போதும் உன் நினைவாய்.....
நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!.........
கல்யாணம் செய்து கொண்டு,
கணவனும் மனைவியுமாகி,
காலையில் அவசரமாய் எழுந்து,
காபி கலந்து, டிபன் செய்து
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
உன்னையும் கிளப்பி அனுப்பி
நானும் ஆபீஸ் சென்று
இருட்டியதும் வந்து
இரவு வேலைகள் முடித்து
இடைஇடையே பிரச்சினைகள் பேசி
எப்போதும் வேலைகள்
எப்போதும் சுற்றியுள்ள உறவுகள்
எல்லாவற்றையும் சமாளித்து
எங்கே அந்த காதல் நினைவுகள்?
யோசிக்கும் முன் தூங்கி...........
ஆம்!
நாம் காதலர்களாகவே
இருந்திருக்கலாம்!!
Saturday, January 31, 2009
கணவனா?காதலனா?...
ஒரு நொடி தாமதமானாலும்
கண்கள் பூத்துப்போகின்றன!!
ஒரு நாள் பார்க்காவிட்டாலும்
கண்கள் கனத்துவிடுகின்றன!
ஒரு நாள் முழுக்க
எங்கேயிருக்கிறாய்
என்ன செய்கிறாய்
என்று கேட்டே
என் ஏர்செல் பில் எங்கோ
போய்விட்டது!!!
உன் மூச்சுக்காற்றின்
மணத்தை
சுவசிக்காத
என் நுரையீரல்களும்
சுருங்கி விடுகின்றன!!
உன் உதடுகளின்
ஸ்பரிசம்
கேட்டு
என் இதயமும்
துடிதுடிக்கிறது!!
உன்னை
ஒரு முறையாவது
உரசிவிடும் நோக்கில்
என் வேலைகள்
எல்லாம்
உன் அருகேயே நடக்கிறது!!
உன்னையும்
உன்னைச்சார்ந்தும்
எப்போதும் யோசித்து
என் சுயம்
முழுக்க
இழந்து விட்டேன் நான்!!
என் தந்தை,தாய்
தமக்கை,தனையன்
தோழிகள் உறவின்ர்
யாரைப்பற்றியும்
யோசிப்பதில்லை நான்!!!
என்னைச்சூழ்ந்து
எங்கும்
வியாபித்திருக்கிறாய்
நீ!!
ஆனால்
நீ...
என் காதலன் அல்ல!
கணவன் என்றால்
எல்லொரும்
வியக்கிறார்கள்!!!!!
ஏனிப்படி??.
Thursday, January 8, 2009
நன்றி! தாரணிபிரியா!!!!
பட்டாம் பூச்சி விருது!!!!

நன்றி!!!!!!!!
தாரணிப்பிரியா!!!
மூன்று பதிவை
போட்டேன் எளிமையாய்!!
தமிழ் மணத்தில்
சேர்ப்பதற்க்குள்
ரொம்ப
சிரமமாச்சு!!
அம்மாடி!....
சேத்தாச்சுன்னு
பார்த்தா?
கருவிப்பட்டையைக்
காணோம்!!!!
இது என்ன
தமிழ்மணம் வைக்கும்
சோதனையா?
இல்லை
எனக்குமட்டும்
வந்த வேதனையா?
வருத்தம்
போக்க
வந்த
பட்டாம்பூச்சியே
வருக!!!
வருக!!!!
நான்
இதற்கு
தகுதியா?
பதில்
தருக!!!
தருக!!!!!!!
Subscribe to:
Posts (Atom)